Search The Adonai Blog

Saturday, May 29, 2021

நம்பிக்கைக்கு உரியவரே

 நம்பிக்கைக்கு உரியவரே

நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்

சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே

பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு

உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்

தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும்

புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்

வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்