Search The Adonai Blog

Sunday, October 04, 2020

அன்பின் நாதா எனக்கென்று

 அன்பின் நாதா எனக்கென்று

ஒன்றையும் நான் விரும்பவில்லை (2)
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் எனக்காக (2)

1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர் ஏனோ என்னை (2)
அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே இல்லா எந்தனின் மேல் (2)

2. உன் இதய பாரம் தாரும்
உம்மைப் போல என்னை மாற்றும் (2)
எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம் என்றும் மகிழ வேண்டும் (2)

3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (2)
எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
உந்தன் பணி சேவைக்கல்லோ (2)

No comments: