ஆதிபிதாக் குமாரன்
ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் - 2 நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் - 2 நிதமும் பணிபவர்கள் இருதயமலர் வாசன் - 2 நிறைந்த சத்திய ஞான மனேகரா உறைந்த நித்திய வேதா குணாகரா, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு சோதனைசெய் அதி நீதர் பங்கில்லான் தாபம் இல்லான் ...ஆ..ஆ..(2) பகரடி முடிவில்லான் - 2 பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும் - 2 பண்பதாய் சுயம்பு விவேகன் அன்பிரக்க தயாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரிபாலனத்தையும் பன் பாய்நடத்தி அருள் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் நீனிலத்தில்லாமல் அழிந்து தீதுறு நரகில் தள்ளுண்டு மடிவோ மென்று தேவதிருவுள்ளம் உணர்ந்து பாதகர்க் குயிர் தந்த.... ஆ... ஆ... (2) பாலன் யேசுவைக்கொண்டு - 2 பரன் எங்கள்மிசை தயை வைத்தனர் இது நன்று - 2 பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும்







ஆதிபிதாக் குமாரன் ஆவி
திரி யேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்...
Comments
Post a Comment