Skip to main content

இவர்களில் ஒருவருக்கும் தெரியாது

 ⏲ 5 mins


இவர்களில் ஒருவருக்கும் தெரியாது

1. பேரழிவில் காப்பாற்றப்பட்டு, பேழையின் கதவு    திறக்கப்படும்வரை. 
*நோவாவிற்கு* *தெரியாது,* தேவன் தன்னை ஓர் புதிய உலகில் தரையிறக்குவாரென்று.

2. எகிப்திற்கு வரும்வரை *யோசேப்பிற்கு தெரியாது*  குழியில் கிடந்த தன்னை, தேவன் எகிப்திலே  குபேரனாக்குவாரென்று. ஆதி 41:43.

3. பெத்லகேம் வரும்வரை, *ரூத்திற்கு தெரியாது* போவாசின் மனைவியாவாளென்று. ரூத் 4:10

4. எருசலேம் வரும்வரை,
தென்தேசத்து *ராஜஸ்திரீக்கு தெரியாது* தான் நினைத்ததைவிட சாலமோனின் மகிமை பெரிதென்று. 1இராஜா 10:6-7

5. மீனானது தன்னை நினிவேயின் கரையில் கக்கும்வரை, *யோனாவிற்கு தெரியாது* ஆண்டவர் தன்னை மீண்டும் நினிவே பட்டணத்திற்கே  அனுப்புவாரென்று. யோனா 2:10

6. ஜெபவீடு வரும்வரை, *பேதுருவுக்கு தெரியாது* தனக்காக ஒரு கூட்டம் இரவு ஜெபம் செய்கிறார்களென்று. அப் 13:17.

7. பத்மு தீவிற்கு வரும்வரை *யோவானுக்கு தெரியாது* வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை தான் எழுதுவேனென்று.

   இப்படி அநேகர் தங்களின் வாழ்வில், முழுமையாக தேவனது திட்டத்தை தெரிந்துக்கொள்ள முடியாதிருந்தும்.

*தேவனோ*
அவர்களின் வாழ்வில், தமது நித்திய திட்டத்தை நிறைவேற்றினார்.

   *நாம் என்னசெய்ய வேண்டுமென்று நமக்கு  தெரியாமல்போனாலும், நம்மைக்கொண்டு என்ன செய்யவேண்டுமென்று, நம்மை அழைத்த தேவனுக்கு தெரியும்!*

Comments

Popular posts from this blog

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over Reference: John 14:15 — "If you love me, keep my commandments" — sits at a hinge point in Jesus's Farewell discourse, right before HE promises the Holy Spirit (the "Advocate"/Paraclete). Root verb: τηρέω (tēreō) — not the more common Greek word for "obey" (peithomai/hypakouō, meaning to submit to authority), but a word that literally means "to guard," "to watch over," "to keep watch". It's the word used for a guard keeping watch at a post, or someone safeguarding a treasure. Love is defined by obedience, not sentiment. Jesus doesn't say "if you love me, feel devoted to me" — he ties love to concrete action. In John's Gospel, love is verifiable; it shows up in behaviour, not just emotion. The Greek verb for "keep" (tērēsete) is future tense and follows a conditional — love isn't presented as a prerequisite for a transaction ("obey...